சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தத்திற்கு இன்றுடன் 19 வருடங்கள்
சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தம் இடம்பெற்று இடம்பெற்று இன்றுடன் 19வருடங்கள் பூர்த்தியாகின்றன.
இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் இன்று காலை 9.25ல் இலிருந்து 9.27 வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மக்களிடம் கோரிக்கை விடுத்திருக்கிறது.
2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் திகதி காலை வேளை சுனாமி நாட்டை தாக்கியது. இதில் சுமார் 35 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
சுனாமி ஏற்பட்டதன் பின்னர் 2005ஆம் ஆண்டில் இலங்கையில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஸ்தாபிக்கப்பட்டது.
இதன்படி அனர்த்தங்களை முன்கூட்டியே அறிவித்தல் அனர்த்தங்களின்போது பாதிப்புக்களை குறைப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல் என்பன நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
அனர்த்தங்கள் பற்றி அடிக்கடி தெளிவுபடுத்தும் வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
👉சுனாமி பேரலை வந்து 19 வருடங்கள் ஆனால் அதன் வடுக்கள் இன்னும் நீங்கவில்லை