0
0
Published on
December 29, 2023
Category:
IQ
அனைத்து போட்டி பரீட்சைக்குமான நுண்ணறிவு வினா விடைகள்
Download PDF here 👇
நுண்ணறிவு எண் , அல்லது IQ என்பது, நுண்ணறிவை மதிப்பிடுவதெற்கென வடிவமைக்கப்பட்ட பல வேறுபட்ட தரநிலையாக்கப்பட்ட சோதனைகளில் ஒன்றின் மூலம் பெறப்படும் மதிப்பாகும். ஜெர்மன் சொல்லான Intelligenz-Quotient என்பதிலிருந்து வந்த "IQ" எனும் சொல், முதன்முதலில் ஜெர்மானிய உளவியலாளர் வில்லியம் ஸ்டெர்ன் என்பவரால் 1912[1] இல் பயன்படுத்தப்பட்டது, அது 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆல்ஃப்ரெட் பினே மற்றும் தியோடர் சைமன் ஆகியோரால் உருவாக்கப்பட்ட, அப்போதைய நவீன குழந்தைகளின் நுண்ணறிவு சோதனைகளில் மதிப்பிடுவதற்காக முன்மொழியப்பட்ட ஒரு முறையாக அச்சொல் பயன்படுத்தப்பட்டது.[2] "IQ" எனும் சொல் இப்போதும் பொதுவான பயன்பாட்டில் உள்ளது எனினும், வெஸ்லெர் வயதுவந்தோர் நுண்ணறிவு அளவீடு போன்ற நவீன IQ சோதனைகளின் மதிப்பிடுதலானது மைய மதிப்பு (சராசரி IQ) 100 எனவும் திட்ட விலக்கம் 15 எனவும் உள்ள காசியன் பெல் வளைவின் மீது பொருள்களின் அளவிடப்பட்ட தரத்தின் வீழலை அடிப்படையாகக் கொண்டே அமைகின்றது, இருப்பினும் வெவ்வேறு சோதனைகள் வெவ்வேறு திட்டவிலக்கங்களைப் பெற்றிருக்கலாம்.
IQ
0
Published on
December 29, 2023
#வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பட்டப் படிப்பை தொடர்வதற்கு உத்தேசித்துள்ள மாணவர்களுக்கு .
👉தொழில் நிமித்தம் ஒரு பட்டப் படிப்பை தொடர விரும்புகிறீர்களா அல்லது உங்களுடைய பெயருக்கு பின்னால் ஒரு பட்டம் வரவேண்டும் என்பதற்காக ஒரு பட்டத்தை பெற விரும்புகிறீர்களா என்று ஒரு தெளிவான ஒரு பார்வை உங்களிடம் இருத்தல் வேண்டும்
👉 நீங்கள் உங்களுடைய எதிர்கால ஒரு தொழில் நிமித்தம் ஒரு பட்டத்தை பெற விரும்புகிறீர்கள் என்றால்…
1. நீங்கள் பட்டப்படிப்பை தொடரவிருக்கும் பல்கலைக்கழகம் இலங்கையில் அல்லது வெளிநாடு ஒன்றில் இருக்கிறது என்றால் அது உள்நாட்டில் உள்ள UGC (யூனிவர்சிட்டி கிரான் கமிஷன்) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழகமா என்று பார்த்துக் கொள்ளுங்கள்.
https://www.ugc.ac.lk/index.php?option=com_content&view=article&id=105&Itemid=100&lang=en
2. நீங்கள் பட்டப்படிப்பை தொடரவருக்கும் பல்கலைக்கழகம்
Commonwealth நாடுகளில் அங்கத்துவம் பெற்ற ஒரு நாடுக்குறிய பல்கலைக்கழகம் என்றால் Association of Commonwealth Universities என்ற அமைப்பில் அங்கத்துவத்தை பெற்ற ஒரு பல்கலைக்கழகமா என்று சரி பார்த்துக் கொள்ளுங்கள்.
https://www.acu.ac.uk/
3. நீங்கள் பட்டப்படிப்பை தொடரவருக்கும் பல்கலைக்கழகம்
International Association of Universities என்ற அமைப்பில் அங்கத்துவத்தை பெற்ற ஒரு பல்கலைக்கழகமா என்று சரி பார்த்துக் கொள்ளுங்கள்.
http://www.whed.net/home.php
4. மேல் குறிப்பிட்ட இந்த இரண்டு அமைப்பில் Association of Commonwealth Universities அல்லது International Association of Universities. ஏதாவது ஒன்றில் நீங்கள் பட்டப் படிப்பை தொடரவிருக்கும் பல்கலைக்கழகம் அங்கத்துவம் பெற்றிருந்தால் அந்தப் பட்டப்படிப்பு இலங்கையில் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்கும்.
அடுத்து மிக முக்கியமான ஒரு விடயம் இருக்கின்றது .
5. வெளிநாட்டு பல்கலைக்கழகம் ஒன்று இலங்கையில் வந்து அதன் கிளையை ஆரம்பித்திருக்கின்றது என்றால், அந்த பல்கலைக்கழகம் இந்த இரண்டு அமைப்பிலும் (Association of Commonwealth Universities அல்லது International Association of Universities. )
அங்கத்துவத்தை பெற்றிருந்தாலும், அல்லது ஏதாவது ஒன்றில் அங்கத்துவத்தை பெற்றிருந்தாலும்,
குறிப்பிட்ட பல்கலைக்கழகத்தின் தலைமையகம் எந்த நாட்டில் அமைந்திருக்கின்றதோ அந்த நாட்டில் நீங்கள் தேர்வு செய்கின்ற குறிப்பிட்ட பாடத்திட்டம் அந்த பல்கலைக்கழகத்தில் கற்பிக்கப்படுகின்றதா என்பதை நீங்கள் சரிபார்த்துக் கொள்ளுங்கள்
உதாரணத்திற்கு பிரத்தானியாவினுடைய ஒரு பல்கலைக்கழகம் இலங்கையில் அதன் கிளையை ஆரம்பிக்கப்படுகின்றது என்று வைத்துக் கொள்வோம் அந்த பிரித்தானியாவில் அமைந்திருக்கும் பல்கலைக்கழகத்தில் குறிப்பிட்ட ஒரு பாடம் இல்லாமல் இருக்கலாம் அந்தப் பாடத்திட்டத்தை அவர்கள் இலங்கை பல்கலைக்கழகத்தில் நடைமுறைப்படுத்தி கற்றுக் கொடுத்தால் அந்தக் குறிப்பிட்ட பாடத்துக்குரிய சான்றுதலுக்கு உங்களுக்கு UGC அங்கீகாரம் கிடைக்கப் பெறாது.
அண்மைக்காலமாக இலங்கையில் சில வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் தமக்கு UGC அங்கீகாரம் இருப்பதாக கூறி பிரச்சாரம் செய்து மாணவர்களை உள்வாங்குகிறார்கள் அந்தப் பல்கலைக்கழகத்துக்கு அங்கீகாரம் இருக்கலாம் ஆனால் நீங்கள் தெரிவு செய்கின்ற பட்டப்படிப்பு பாடத்து துறைக்கு அங்கீகாரம் இருக்கின்றதா என்பதை சரியான முறையில் ஆய்வு செய்து பார்த்துக் கொள்ளுங்கள்.
கடந்த காலங்களில் ஒரு வெளிநாட்டு பல்கலைக்கழகம் சட்டத்துறை பட்டப் படிப்பை வழங்குகின்றோம் என்று கூறி பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஏமாற்றப்பட்ட ஒரு சம்பவம் இலங்கையில் நடந்தேறி இருக்கின்றது.
இப்படியான வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் நீங்கள் பட்ட படிப்பை தொடர விரும்புகிறீர்கள் என்றால் ,சரியான ஒரு ஆய்வை மேற்கொண்டதன் பின்பு அந்த பட்டப் படிப்பை தொடர்வது நன்று, அல்லது மூன்று நான்கு வருடங்களை கடத்திவிட்டு நீங்கள் எந்த பிரயோசனமும் இல்லாமல் உங்கள் சான்றிதழ்களை வீடுகளில் தான் வைத்திருக்க வேண்டும் அதனை வைத்து எந்த தொழில்துறைக்கும் விண்ணப்பிக்க முடியாத ஒரு நிலை உருவாகலாம், எனவே இந்த விடயங்களில் மாணவர்களுக்கு ஒரு தெளிவான ஒரு அவதானம் தேவைப்படுகிறது.
0
Published on
December 28, 2023
Category:
GK TAMILAN INFORMATION ℹ️
65610 சதுர கிலோமீற்றர் பரப்பளவையும் 2,22,77,527 மக்கள் தொகையையும் கொண்டுள்ள ஒரு சிறிய நாட்டின் பெருமைகளைப் பாருங்கள்!!
01. உலகில் அதிக அரச விடுமுறைகள் கொண்ட நாடு.
02. உலகின் முதலாவது பெண் பிரதம மந்திரியைத் தெரிந்தெடுத்த நாடு.
03. ஆசியாவில் சர்வசன வாக்குரிமை கிடைத்த முதலாவது நாடு.
04.முதலாவதாக ஆசியாவில் வானொலி ஒலிபரப்பைத் தொடங்கிய நாடு.
05. ஆங்கிலேயரின் முதலாவது முடிக்குரிய குடியேற்ற நாடு.
06.உலகின் மிக உயர்தர தேயிலையை ஏற்றுமதி செய்யும் நாடு.
07.உலகின் அதிகூடுதலான, மிக உயர்தர கருவாவை ஏற்றுமதி செய்யும் நாடு.
08. உலகின் முதலாவது வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்பட்ட நாடு.
09. உலகில் கிரிக்கெட் அணியொன்றை உருவாக்கி மிக குறைந்த ஆண்டுகளுக்குள் உலக சாம்பியன் ஆன நாடு.
10. மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் தகர்க்க முடியாத ஓட்ட சாதனையை தன்னகத்தே கொண்ட ஒரே நாடு.
பெருமைக்குரிய எம் தாய்த்திருநாடு.
SRILANKA 🇱🇰
0
Published on
December 27, 2023
Category:
General knowledge
2023 ஆம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகள் அடங்கிய தொகுப்பு. போட்டிப் பரீட்சைகளுக்கு தயாராகுபவர்களுக்கு ஏற்ற வகையில் தொகுக்கப்பட்டுள்ளது.
0
Published on
December 27, 2023
Category:
GK TAMILAN INFORMATION ℹ️
கல்வி உளவியல்-நுண்மதி(INTELLIGENCE)
நுண்ணறிவு எண் , அல்லது IQ என்பது, நுண்ணறிவை மதிப்பிடுவதெற்கென வடிவமைக்கப்பட்ட பல வேறுபட்ட தரநிலையாக்கப்பட்ட சோதனைகளில் ஒன்றின் மூலம் பெறப்படும் மதிப்பாகும். ஜெர்மன் சொல்லான Intelligenz-Quotient என்பதிலிருந்து வந்த "IQ" எனும் சொல், முதன்முதலில் ஜெர்மானிய உளவியலாளர் வில்லியம் ஸ்டெர்ன் என்பவரால் 1912[1] இல் பயன்படுத்தப்பட்டது, அது 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆல்ஃப்ரெட் பினே மற்றும் தியோடர் சைமன் ஆகியோரால் உருவாக்கப்பட்ட, அப்போதைய நவீன குழந்தைகளின் நுண்ணறிவு சோதனைகளில் மதிப்பிடுவதற்காக முன்மொழியப்பட்ட ஒரு முறையாக அச்சொல் பயன்படுத்தப்பட்டது.[2] "IQ" எனும் சொல் இப்போதும் பொதுவான பயன்பாட்டில் உள்ளது எனினும், வெஸ்லெர் வயதுவந்தோர் நுண்ணறிவு அளவீடு போன்ற நவீன IQ சோதனைகளின் மதிப்பிடுதலானது மைய மதிப்பு (சராசரி IQ) 100 எனவும் திட்ட விலக்கம் 15 எனவும் உள்ள காசியன் பெல் வளைவின் மீது பொருள்களின் அளவிடப்பட்ட தரத்தின் வீழலை அடிப்படையாகக் கொண்டே அமைகின்றது, இருப்பினும் வெவ்வேறு சோதனைகள் வெவ்வேறு திட்டவிலக்கங்களைப் பெற்றிருக்கலாம்.
IQ
0
Published on
December 26, 2023
*முதல் குறிப்பு:*
உங்களுக்கு உடம்பு சரியில்லையோ அல்லது எந்த நோயும் இல்லாவிட்டாலும், ஒவ்வொரு வருடமும் கப்பிங் செய்ய வேண்டும்.?
(கப்பிங் என்றால் என்ன?
கப்பிங் என்பது ஒரு பழங்கால குணப்படுத்தும் சிகிச்சையாகும், சிலர் வலியைக்குறைக்க பயன்படுத்துகின்றனர். வழங்குநர் உங்கள் முதுகு, வயிறு, கைகள், கால்கள் அல்லது உங்கள் உடலின் பிற பகுதிகளில் கோப்பைகளை வைக்கிறார். கோப்பையின் உள்ளே, ஒரு வெற்றிடம் அல்லது உறிஞ்சும் விசை தோலை மேல்நோக்கி இழுக்கிறது.
கப்பிங் என்பது பாரம்பரிய சீன மற்றும் மத்திய கிழக்கு மருத்துவத்தின் ஒரு வடிவமாகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்கள் கப்பிங் சிகிச்சையை கடைபிடித்துள்ளனர்.)
*இரண்டாவது குறிப்பு:*
உங்களுக்கு தாகம் இல்லாவிட்டாலும் அல்லது தேவைப்படா விட்டாலும் எப்போதும் தண்ணீரைக்குடியுங்கள்... மிகப்பெரிய உடல்நல பிரச்சனைகள் மற்றும் அவற்றில் பெரும்பாலானவை உடலில் நீர் பற்றாக்குறையால் ஏற்படுகின்றன.
*மூன்றாவது உதவிக்குறிப்பு:*
உங்கள் ஆர்வத்தின் உச்சியில் இருக்கும் போது கூட விளையாட்டுகளை விளையாடுங்கள்... கராத்தே, கால்பந்து, நீச்சல் அல்லது நடைபயிற்சி... அல்லது எந்த வகையான விளையாட்டாக இருந்தாலும், உடலை நன்கு அசைக்க வேண்டும்.
*நான்காவது குறிப்பு*
உணவை குறைத்து...
அதிகப்படியான உணவு ஆசையை விடுங்கள்... ஏனெனில் அது ஒருபோதும் நல்லதைத்தராது. உங்களை இழக்காதீர்கள், உண்ணுங்கள் ஆனால் அளவைக்குறைக்கவும்.
*ஐந்தாவது குறிப்பு*
கூடுமானவரை, முற்றிலும் தேவையில்லாமல் காரைப்பயன்படுத்தாதீர்கள்... நீங்கள் விரும்புவதை (மளிகை சாமான்கள், நீங்கள் வசிக்கும் மிகஅருகில் ஒருவரைப்பார்ப்பதற்கு செல்வது...) அல்லது எந்த இலக்கையும் அடைய நடந்தே முயற்சிக்கவும்.
*ஆறாவது குறிப்பு*
கோபத்தை விடுங்கள்...
கோபத்தை விடுங்கள்...
கோபத்தை விடுங்கள்...
கவலையை விடுங்கள்... கவலைதரும் விஷயங்களை கவனிக்காமல் இருக்க முயற்சி செய்யுங்கள்...
குழப்பமான சூழ்நிலைகளில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளாதீர்கள்... அவை அனைத்தும் ஆரோக்கியத்தைக் குறைத்து ஆன்மாவின் சிறப்பைப்பறிக்கின்றன.
*ஏழாவது குறிப்பு*
சொல்வது போல்.. பணத்தை வெயிலில் விட்டுவிட்டு.. நீங்கள் நிழலில் உட்காருங்கள்.. உங்களையும் உங்களை சுற்றியுள்ளவர்களையும் மட்டுப்படுத்தாதீர்கள்.. பணம் நம்மை வாழ வைத்தது, அதற்காக நாம் வாழ அல்ல.
*எட்டாவது குறிப்பு*
யாருக்காகவும் வருத்தப்பட வேண்டாம்.
உங்களால் சாதிக்க முடியாத ஒரு விஷயமும் இல்லை
உங்களால் சொந்தமாக முடியாத எதுவும் இல்லை.
புறக்கணி, மறந்துவிடு;
*ஒன்பதாவது குறிப்பு*
பணிவு.. அப்புறம் பணிவு.. பணம், மதிப்பு, அதிகாரம், செல்வாக்கு.. எல்லாமே ஆணவத்தால் சீரழிந்தவை..
மனத்தாழ்மையே மக்களை அன்புடன் நெருங்க வைக்கிறது.
*பத்தாவது குறிப்பு*
உங்கள் தலைமுடி நரைத்திருந்தால், இது வாழ்க்கையின் முடிவைக்குறிக்காது. ஒரு சிறந்த வாழ்க்கை தொடங்கிவிட்டது என்பதற்கு இது ஒரு சான்று. நம்பிக்கையுடன், நினைவுடன் வாழுங்கள், பயணம் செய்யுங்கள், மகிழ்ச்சியாக இருங்கள்.
*((கடைசி மற்றும் மிக முக்கியமான ஆலோசனை)*
நம்பிக்கை வையுங்கள்.
*நீங்கள் எப்போதும் நல்ல ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் பெற்று வாழ விரும்புகிறேன்*
என்றும் அன்புடன் வாழ்வோம்... நன்றி






















