✅👉மொபைல் போன் தொலைந்தால் என்ன செய்ய வேண்டும்..?

0

 


✅👉மொபைல் போன் தொலைந்தால் என்ன செய்ய வேண்டும்..?


🌐 On, December 18, 2025


🌐 News Editor


✅👉இன்றைய காலத்தில் மொபைல் போன் தொலைவது என்பது, 


பண இழப்பு மட்டும் அல்ல தனிப்பட்ட தகவல்கள், வங்கி விவரங்கள், புகைப்படங்கள், சமூக வலைதள கணக்குகள் அனைத்தும் ஆபத்துக்குள்ளாகும் விஷயம். 


அதனால் மொபைல் தொலைவதற்கு முன்பே இவற்றை இன்று itself செய்து வைத்துக் கொள்ளுங்கள் ⬇️ 


1️⃣ IMEI எண்ணை உடனே பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள் 


📌 *#06# டயல் செய்யுங்கள்

📌 திரையில் வரும் 15 இலக்க IMEI எண்ணை

📌 ஒரு காகிதத்தில் / டைரியில் எழுதி பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள் 


👉 போலீஸ் புகார் கொடுக்க மிக முக்கியமானது இதுதான். 


2️⃣ Gmail / iCloud கணக்கு விவரங்களை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள் 


பலர்:

❌ கடையில் உருவாக்கிய Gmail

❌ அதன் Password கூட தெரியாமல் போனை பயன்படுத்துகிறார்கள் 


📌 இன்று செய்ய வேண்டியது: 


• உங்கள் Gmail / iCloud email 


• அதற்கான Password

👉 உங்களுக்கு நினைவில் உள்ளதா என சரிபாருங்கள்

👉 இல்லையெனில் பாதுகாப்பாக எழுதிவையுங்கள் 


📍 மொபைலை Track செய்ய ஒரே வழி இதுதான். 


3️⃣ Find My Device / Find My iPhone ON செய்து வைத்திருங்கள் 


🔹 Android – Find My Device

🔹 Apple – Find My iPhone

🔹 Location Services – ON 


➡️ மொபைலை:

✔️ Map மூலம் பார்க்க

✔️ Lock செய்ய

✔️ Data முழுவதும் அழிக்க (Wipe) 


4️⃣ வலுவான பாதுகாப்பு முறையை பயன்படுத்துங்கள் 


❌ Lock இல்லாமல் / Simple pattern = பெரிய ஆபத்து 


✅ Strong Password / Pattern

✅ Fingerprint / Face ID 


👉 திருடன் உடனே போனை திறந்து Data அழிப்பதை தடுக்கும். 


5️⃣ முடிந்தால் E-SIM பயன்படுத்துங்கள் 


📌 Physical SIM எளிதில் எடுக்கலாம்

📌 E-SIM எடுக்க முடியாது 


➡️ மொபைல் Internet-க்கு இணைந்தே இருக்கும்

➡️ கண்டுபிடிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும் 


6️⃣ Power OFF செய்ய Password அவசியமாக்குங்கள் 


📌 Settings → Security

📌 Require password to power off – ON 


➡️ திருடன் போனை OFF செய்ய முடியாது

➡️ Track செய்ய உங்களுக்கு அதிக நேரம் கிடைக்கும் 


⚠️ கடைசியாக 


மொபைல் தொலைந்த பிறகு வருத்தப்படுவதற்குப் பதிலாக

👉 முன்பே தயாராக இருப்பது

👉 உங்கள் தகவல்களையும் வாழ்க்கையையும் பாதுகாக்கும். 


விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இலங்கை பொலிஸ் பொது மக்களுக்கு வழங்கும் செய்தி 


இந்த தகவலை உங்கள்

👨‍👩‍👧‍👦 குடும்பத்தினருக்கும்

👫 நண்பர்களுக்கும்

கண்டிப்பாக Share செய்யுங்கள் 🙏


#Awareness #phone #gk #iq