சாரதி அனுமதிப்பத்திரம் (Driving License) புதுப்பித்தல் கட்டண விபரங்க

0

 


🚗 சாரதி அனுமதிப்பத்திரம் (Driving License) புதுப்பித்தல் கட்டண விபரங்கள் 📢

சாரதி அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பித்தல், திருத்தங்கள் செய்தல் மற்றும் தொலைந்த அனுமதிப்பத்திரத்தை மீண்டும் பெறுதலுக்கான அரச கட்டண விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

🔴 1. சாதாரண புதுப்பித்தல் (Normal Renewal)

 * கட்டணம்: ரூ. 3,025/-

 * தேவையானவை: மருத்துவ சான்றிதழ், பழைய லைசன்ஸ், தேசிய அடையாள அட்டை பிரதி.

🔴 2. காலாவதியான லைசன்ஸ் (Expired License)

 * காலாவதியான ஒவ்வொரு வருடத்திற்கும் தண்டப்பணம்: ரூ. 500/- (மேலதிகமாக)

🔴 3. விபரங்களை மாற்றம் செய்தல் (Data Change)

 * பெயர், முகவரி அல்லது அடையாள அட்டை இலக்கம் மாற்றம் செய்ய.

 * கட்டணம்: ரூ. 500/-

🔴 4. தொலைந்த அனுமதிப்பத்திரத்தை மீண்டும் பெற (Lost License)

 * கட்டணம்: ரூ. 9,125/-

 * தேவையானவை: பொலிஸ் அறிக்கை, மருத்துவ சான்றிதழ் (காலாவதியாகியிருப்பின் மட்டும்), தேசிய அடையாள அட்டை பிரதி, பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் (3).

 * குறிப்பு: தொலைந்த லைசன்ஸ் காலாவதியாகியிருந்தால் வருடத்திற்கு ரூ. 500 தண்டப்பணம் அறவிடப்படும்.

📌 பொதுவான ஆவணங்கள்:

 * செல்லுபடியாகும் மருத்துவ சான்றிதழ் (Medical Certificate).

 * தேசிய அடையாள அட்டை (NIC) மற்றும் அதன் நிழற்படப் பிரதி.

 * பழைய சாரதி அனுமதிப்பத்திரம் (புதுப்பித்தலுக்கு).

 * பொலிஸ் அறிக்கை (தொலைந்திருந்தால் மட்டும்).

பயனுள்ள தகவலை நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்! 🤝

#Srilanka #DrivingLicense #DMT #MotorTraffic #LicenseRenewal #Fees #SrilankaNews #TrafficRules #Information #GK

கிராம நிலதாரி போட்டி பரீட்சைக்கான நுண்ணறிவு மற்றும் பொது அறிவு வினாத்தாள்

0

 


கிராம நிலதாரி போட்டி பரீட்சைக்கான நுண்ணறிவு மற்றும் பொது அறிவு வினாத்தாள் 

Download here PDF 👇

https://drive.google.com/file/d/1qxD2S_2bUolKrQZQAXrsmFGh1LaQj9n6/view?usp=drivesdk


இலங்கையில் கிராம சேவையாளர்களுக்கான பதவி வெற்றிடங்கள் 2000 அளவில் காணப்படுவதுடன் அவ்வெற்றிடங்களைப் பூர்த்தி செய்வதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டு விட்டன எனவே உயர் தரம் படித்துவிட்டு தொழில்களை எதிர்பார்த்திருக்கின்றவர்களுக்கு இந்த தொழிலைப் பெற்றுக்கொள்ள இதுவாய்ப்பாக அமைகின்றது. குறித்த பரீட்சையில் முறையாக சித்திடைவதற்காக தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்வதற்குத் தேவையான தகவல்களை இந்தப் பதிவு வழங்குகின்றது.


விண்ணப்ப முடிவுத்திகதி 2025.11.24


கிராம உத்தியோகத்தர் என்பவர் யார்?


கிராம அலுவலர் அல்லது கிராம உத்தியோகத்தர் (Gram Nadar Village officer" எனப்படுபவர் கிராம சேவையாளர் பிரிவுகளில் நிர்வாக சேவைகளைச் செய்வதற்காக நியமிக்கப்படுகின்ற ஒருவராவார் கிராம சேவையாளரின் பணியாக புள்ளி விபரங்கள் திரட்டுதல், வாக்காளர் பதிவைப் பராமரித்தல், அனுமதி வழங்கலை அறிக்கையிடல், தனிநபர் சச்சரவுகளை சரி செய்து சமாதானத்தைப் பேணல் ஆகியனவாகும். இவர்கள் தங்கள் ங்கள் பகுதியில் நடக்கும் குற்றச் செயல்களை கண்கானிப்பதும், அங்குள்ளவர்களின் தேவையின் பொருட்டு அவர்களுக்கு நன்நடத்தை சான்றும் வழங்குவது இவர்களது பொறுப்பாகும்


வயதெல்லை என்ன?


21 வயதுக்குக் குறையாலும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்


கிராமசேவையாளருக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கும்;


சம்பளத்திட்டமாக 

Monthly salary scheme applicable to the post: 

Salary scale – Rs.50,630 - 10x540 - 11 x 630 - 10 x 

1010 - 10 x 1190 – Rs.84,960. (Payments shall be made 

subject to the provisions mentioned in Schedule (ii) of 

the Public Administration Circular No.10/2025 dated 

25.03.2025.)


கிராம உத்தியோகத்தர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கல்விக்கைமைகள் என்ன?


(அ) கல்விப் பொதுத் தராதரப்பத்திர (சாதாரண தரம்) பரீட்சையில் முதல் மொழியாக சிங்களம்/தமிழ் மொழி ஆகிய


பாடங்களுள் ஒரு பாடத்தினையும். கணிதம் உள்ளடங்கலாக ஆகக்குறைந்தது நான்கு (4) பாடங் களில் திறமைச் சித்திகளுடன் ஆறு (6) பாடங் களில் ஒரே அமர்வில் சித்தியடைந்திருத்தல்,


அத்துடன்


(ஆ) கல்விப் பொதுத் தராதர (உயர்தர) பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் (பொதுப் பரீட்சை மற்றும் ஆங்கில மொழி தவிர)ஒரே அமர்வில் சித்திபெற்றிருத்தல் பழைய பாடத்திட்டத்தின் கீழ் மூன்று (3) படங்களில் ஒரே அமர்வில் சித்தி பெற்றிருப்பது போதுமானது


தெரிவுமுறை எவ்வாறு இடம்பெறும்?


1) எழுத்துமூலப் பரீட்சை ஒன்று நடாத்தப்படும் அந்த பரீட்சையில் ஒவ்வொரு பிரதேசசெயலக பிரிவுகளிலும் கூடிய புள்ளிகளைப் பெறுகின்றவர்கள் தெரிவு செய்யப்பட்டு கட்டமைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சை ஒன்றிற்கு உட்படுதப்படுவார்கள். ஒவ்வொருபிரதோ செயலகப் பிரிவிலும் காணப்படுகின்ற வெள்ளிடங்களில் இரண்டு மடங்கானவர்கள் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்டுவார்கள்


இறுதியாக எழுத்துப் பரீட்சையின் புள்ளிகள் மற்றும் நேரமுகப்பரீட்சையின் புள்ளிகள் என்பவற்றின் கூட்டுத்தொயாக அத அதிக புள்ளிகளைப் பெறுபவர்கள் பதவிகளுக்காக நியமனம் பெறுவார்கள்.


எழுந்துப் பரீட்சையின் கட்டமைப்பு


01) மொழிப் பரீட்சை இது மொழியாற்றலை பரிசோதிப்பதாக அமையும் க.பொ.த (சா/த) தமிழ்மொழி புத்தகத்தில் உள்ள விடயங்களை மீட்டிப் பார்த்துக்கொள்வது போதுமானது குறித்த வினாத்தாள் கீழ்வரும் விடயங்களை உள்ளடக்கியதாக அமையும்


இவ்வினாப்பத்திரம் விண்ணப்ப தாரர்களின் கருத்துத் தெரிவிப்பு,


புரிந்துகொள்ளுதல்,


எழுந்துகு அமைப்பு,


மொழியும் கட்டுரையும்


வழங்கப்பட்ட கடிதமொன்றை வரைதல்,


வழங்கப்பட்ட பந்தியொன்றை கருக்குதல்


வழங்கப்பட்டுள்ன தரவுகளின்படி விபரங்களைத் தயாரித்தல், வாக்கியங்கள்சிலவற்றின் கருத்தைத் தனிவாக்கியத்தில் எழுதுதல்,


இலகுவான இலக்கணப் பயன்பாடு


குறித்த அறிவைப் பரிசீலனை செய்யும் வினாக்களைக் கொண்டது. சகல


வினாக்களுக்கும் விடை அளித்தல் வேண்டும்


1 1/2 மணித்தியாலயம் கொண்ட இந்த வினாப்பத்திரத்திற்கு 100 புள்ளிகள் வழங்கப்படும்.


(02) பொது அறிவும் பொது உளசார்பும்: விண்ணப்பதாரரர்களின் கிரகித்தல் திறனையும் பொது அறிவுத்திறனையும் பரிசோதிப்பதற்காக பொது அறிவும் உளச்சார்பும் என்ற வினாத்தன் வழங்கப்படும்.


இவ்வினாப்பத்திரம் மூலம்


நாட்டின் வரலாறு பூகோல, சமூக பொருளாதார ரீதியில் முக்கியமான தகவல்கள் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு


சமகாலத் தகவல்கள் பற்றிய பொது அறிவு,


எண்கணிப்பு


தர்க்கிக்கும் சக்தி


பிரச்சினைகளைத் தீர்த்தல்,


தீர்மானம் மேற்கொள்ளும் ஆற்றல் உட்பட பொது அறிலை அளவிடும் வகையில் தயாரிக்கப்படும் பல்தேர்வு மற்றும் சுருக்கமான விடைகளை வழங்கும்


மாதிரியிலான வினாக்ககளைக் கொண்டது. எல்லா வினாக்களுக்கும் விடை அளித்தல் வேண்டும்


112 மணித்தியாலயம் கொண்ட இந்த வினாப்பத்திரத்திற்கு 100 புள்ளிகள் வழங்கப்படும்.


கட்டமைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சை இங்கு கீழ்வரும் அடிப்படையில் புள்ளி வழங்கப்படும்


 தலைமைத்துவம் - 15 விளையாட்டுத் திறன்கள் - 05 

பிற அலுவல் மொழி அல்லது இணைப்பு மொழி திறமை -  10 

கணினி அறிவு - 10 நேர்காணலில் காட்டப்பட்ட திறன் - 10 


மொத்தம் 50


அரச நிறுவனங்கள் திணைக்களங்கள் என்பவற்றில் பெற்றுக்கொண்ட சான்றிதழ்கள் அல்லது கடிதங்கள் மாத்திரமே கவனத்திதில்கொள்ளப்படும். உதாரணமாக அறநெறிப் பாடசாலை ஆசிரியர் ஒருவராகக் கடமையாற்றுதல், கிராம அபிவிருத்திச் சங்கமொன்றில் பதவி வகித்தல், விளையாட்டுக் கழகமொன்றில் பதவிகள் வகித்தல் போன்ற விடயங்கள் பிரதேச செயலாளரினால் உறுதிப்படுத்தப்படுதல் வேண்டும்


அத்துடன் கிராம அலுவலர்களுக்கு அரசியல் உரிமைகள் இல்லையாதலால் அரசியல் மட்டத்திலான அமைப்புகளில்


பதவிகள் வகிப்பது தொடர்பாகப் புள்ளிகள் வழங்கப்பட மாட்டாது உதாரணமாக பிரதேச சபைகள்/ நகர சபைகளின் உறுப்பினர்கள். கூட்டுறவுச் சங்கப் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள்


பொன்ற அரசியல் கட்சி பிரதிநிதித்துவத்தினால் பெறப்படும் பதவிகள் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.


நேர்முகப் பரீட்சையில் நெரியானதன் பின்னரான செய்பாடுகள் யாவை?


நேர்முகப் பரீட்சையில் தெரவாகின்றவர்கள்ள மூன்று மாதகாலப் பயிற்சிப் பாடநெறி மாவட்டச் செயலாளரின் மேற்பார்வையின்கீழ் நடைபெறும் அப்பயிற்சிப் பாடநெறி வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கே நியமனம் வழங்கப்படும் பயிற்சிக் காலத்துக்காக 3,000 ரூபா கொடுப்பனவு மட்டும் டும் வழங்கப்படுவதுடன், அக்காலத்தினு விடுமுறை உரித்துக்கள் இருக்காது பயிற்சிநெறி நடைபெறும் நாட்களில் 80% பங்குபற்றுதல் வேண்டும் பயிற்சி நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் நடைபெறும் எழுத்துப் பரீட்சையில் சித்தியடைவதற்காக 50% புள்ளிகள் பெறப்படுதல் வேண்டும் பயிற்சிக்காலம்


சேவைக்காலத்துக்குக கணிக்கப்பட மாட்டாதென்பதுடன், அக்காலம் ஓய்வூதிய விதிகளின் ஏற்பாடுகளுக்கமைய ஓயவூதியக் கணிப்புக்காக மட்டும் தொடர்புபடுத்தப்படும்


இறுதியாக


அரசாங்க பதவிகளைப் பொறுத்தவறையில் ஆரம்ப மட்டப் பதவிகள்தான் அரசாங்க சேவையில் கால் பதிப்பதற்கான பட்டத்தையும் பெற்றுக 5 வருட சேவைக்காலத்துடன ஒரு பட்டத சேவை இலங்கை திட்டமிடல் சேவை கொண்டிருப்பாரானால் அவரால் இலங்கை நிர்வாக சேவை இலங்கை என்ற பதவிகளுக்கான பரீட்சைகளுக்கு தோற்றலாம் அவ்வாறு பரீட்சைகளுக்குத் தோற்றி தற்போது பிரதேச செயலாளர்களாக பதவிவகிப்பவர்களும் இருக்கின்றனர். இந்த சந்தர்ப்பத்தை ஒருவாய்ப்பாக பயன்படுத்தி பரீட்சைகக்கான ஆயத்தங்களை இப்போதே ஆரம்பியுங்கள்


நன்றி

-GK Academy

✅👉மொபைல் போன் தொலைந்தால் என்ன செய்ய வேண்டும்..?

0

 


✅👉மொபைல் போன் தொலைந்தால் என்ன செய்ய வேண்டும்..?


🌐 On, December 18, 2025


🌐 News Editor


✅👉இன்றைய காலத்தில் மொபைல் போன் தொலைவது என்பது, 


பண இழப்பு மட்டும் அல்ல தனிப்பட்ட தகவல்கள், வங்கி விவரங்கள், புகைப்படங்கள், சமூக வலைதள கணக்குகள் அனைத்தும் ஆபத்துக்குள்ளாகும் விஷயம். 


அதனால் மொபைல் தொலைவதற்கு முன்பே இவற்றை இன்று itself செய்து வைத்துக் கொள்ளுங்கள் ⬇️ 


1️⃣ IMEI எண்ணை உடனே பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள் 


📌 *#06# டயல் செய்யுங்கள்

📌 திரையில் வரும் 15 இலக்க IMEI எண்ணை

📌 ஒரு காகிதத்தில் / டைரியில் எழுதி பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள் 


👉 போலீஸ் புகார் கொடுக்க மிக முக்கியமானது இதுதான். 


2️⃣ Gmail / iCloud கணக்கு விவரங்களை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள் 


பலர்:

❌ கடையில் உருவாக்கிய Gmail

❌ அதன் Password கூட தெரியாமல் போனை பயன்படுத்துகிறார்கள் 


📌 இன்று செய்ய வேண்டியது: 


• உங்கள் Gmail / iCloud email 


• அதற்கான Password

👉 உங்களுக்கு நினைவில் உள்ளதா என சரிபாருங்கள்

👉 இல்லையெனில் பாதுகாப்பாக எழுதிவையுங்கள் 


📍 மொபைலை Track செய்ய ஒரே வழி இதுதான். 


3️⃣ Find My Device / Find My iPhone ON செய்து வைத்திருங்கள் 


🔹 Android – Find My Device

🔹 Apple – Find My iPhone

🔹 Location Services – ON 


➡️ மொபைலை:

✔️ Map மூலம் பார்க்க

✔️ Lock செய்ய

✔️ Data முழுவதும் அழிக்க (Wipe) 


4️⃣ வலுவான பாதுகாப்பு முறையை பயன்படுத்துங்கள் 


❌ Lock இல்லாமல் / Simple pattern = பெரிய ஆபத்து 


✅ Strong Password / Pattern

✅ Fingerprint / Face ID 


👉 திருடன் உடனே போனை திறந்து Data அழிப்பதை தடுக்கும். 


5️⃣ முடிந்தால் E-SIM பயன்படுத்துங்கள் 


📌 Physical SIM எளிதில் எடுக்கலாம்

📌 E-SIM எடுக்க முடியாது 


➡️ மொபைல் Internet-க்கு இணைந்தே இருக்கும்

➡️ கண்டுபிடிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும் 


6️⃣ Power OFF செய்ய Password அவசியமாக்குங்கள் 


📌 Settings → Security

📌 Require password to power off – ON 


➡️ திருடன் போனை OFF செய்ய முடியாது

➡️ Track செய்ய உங்களுக்கு அதிக நேரம் கிடைக்கும் 


⚠️ கடைசியாக 


மொபைல் தொலைந்த பிறகு வருத்தப்படுவதற்குப் பதிலாக

👉 முன்பே தயாராக இருப்பது

👉 உங்கள் தகவல்களையும் வாழ்க்கையையும் பாதுகாக்கும். 


விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இலங்கை பொலிஸ் பொது மக்களுக்கு வழங்கும் செய்தி 


இந்த தகவலை உங்கள்

👨‍👩‍👧‍👦 குடும்பத்தினருக்கும்

👫 நண்பர்களுக்கும்

கண்டிப்பாக Share செய்யுங்கள் 🙏


#Awareness #phone #gk #iq

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் - 2026

0


 🛑புதிய கல்விச் சீர்திருத்தங்கள் - 2026


🛑இச்சீர்திருத்தமானது 5 தூண்களின் ( Pillars) கீழ் முன்னெடுக்கப்படுகிறது.


1.  பாடங்களின் கலைத்திட்ட மறுசீரமைப்பும்  அபிவிருத்தியும்


2.  வளவாளர் பயிற்சியும் ஆசிரிய பயிற்சியும்


3.   நிருவாக மறுசீரமைப்பும் உட்கட்டமைப்பு அபிவிருத்தியும்


4.  கணிப்பீடும் மதிப்பீடும்


5.  சமூக விழிப்பூட்டலும் பிரசாரமும்


என்பன அந்த 5 தூண்களும் ஆகும்.


ஆரம்ப கல்வியின் பாடங்கள்

*********************************

I.  தமிழ் (வாசிப்பு நூலும் செயல் நூலும்)

II. ஆங்கிலம்

Iii. இரண்டாம் தேசிய மொழி

Iv. கணிதம்

V. சமயமும் விழுமிய கல்வியும்

Vi. அடிப்படை விஞ்ஞானமும் சுற்றாடல் சார்ந்த செயல்பாடும்.

Vii. ஒன்றிணைந்த அழகியல்

Viii. சுகாதாரமும் உடற்கல்வி யும்.

IX. இணைப்பாட விதான செயற்பாடுகள்


ஆரம்ப பிரிவுகள் தற்போது உள்ளது போலவே முதன்மை நிலைகள் கொண்டிருக்கும்.


இடைநிலைக் கல்வி

************************

மொடியூல் முறையும் GPA முறையும் தரம் 6 தொடக்கம் தடைமுறைக்கு வருகிறது.


35 CREDITS

************

தரம் 6-9 வரை 14 பாடங்கள் காணப்படும்.


அத்தியாவசிய (Essential subjects) பாடங்கள் 14க்கும் விளையாட்டு மற்றும் மாணவர் சங்கங்கள் மற்றும் கழகங்களின் பங்குபற்றலுக்குமாக 30 கிறெடிட்கள் (30 credits) வழங்கப்படும்.


தொடருறு கல்விக்கு வழிப்படுத்தும் மொடியூல் செயற்பாட்டுக்காக ஒவ்வொரு தவணைக்கும் 3 கிறெடிட்கள் (03 credits) கிடைக்கும்.


வாழ்க்கைத் தேர்ச்சியுடன் கூடிய பன்முனைத்திறன்களுக்காக (Transversal skills) 2 கிறெடிட்கள் (2 credits) கிடைக்கும்.


க. பொ.த (சா/த) பரீட்சைக்கு வரலாறு கட்டாய பாடமில்லை. ஆனால் தெரிவுப் பாடமாக (Elective subject) வருகிறது.


30 கிறெடிட்களுக்குரிய பாடங்கள்

***************************************

1.தமிழ் மொழி

2.ஆங்கில மொழி

3.சிங்கள மொழி (இரண்டாம் தேசிய மொழி)

4. கணிதம்

5.விஞ்ஞானம்

6.சுகாதாரமும் உடற்கல்வி யும்

7. ICT

8.வாழ்க்கைக்கான தொழினுட்பம்

9.புவியியல்

10.வரலாறு

11. குடியுரிமை கல்வி

12. சமயமும் விழுமிய கல்வியும்

13. அழகியல் கல்வி

14. முயற்சியாண்மையும்  நிதிசார் எழுத்தறிவும்

15. விளையாட்டு மற்றும் சங்கங்கள் கழகங்களில் பங்குபற்றுதல் (participation only)


03 கிறெடிட்களுக்குரிய பாடங்கள்

***************************************

தொடருறு கல்வி அல்லது உயர்கல்வி நோக்கிய சரியான துறையை நோக்கி மாணவர்களை வழிகாட்டும் வகையில் தமது பிரதேசத்தில் செய்யக்கூடிய தொழில் சந்தைக்கு பொருந்தும் விதமாக ஒவ்வொரு அத்தியாவசிய பாடத்துடனும் தொடர்புடையதாக ஆனால் தவணைக்கு எனும் அடிப்படையில் இதற்கான மொடியூல் 03 கிறெடிட்களுக்காக அமைகிறது.


02 கிறெடிட்களுக்குரிய பாடங்கள்

***************************************

பின்வரும் 09 பாடங்களிலிருந்து விருப்பமான 02 பாடங்களை மட்டும் தெரிவு செய்ய வேண்டும்.


1.இலக்கிய நயம்

2.ஊடக கற்கை (தரம் 8 தொடக்கம் களத்தரிசிப்புக்கள் அவசியம்)

3.சேவைத்துறைக் கல்வி 

4.உலகளாவிய போக்கு கல்வி பற்றிய கல்வி

5.சமூக சேவை

6.சுகாதாரமும் விளையாட்டும்

7.அழகியல் நயம்

8.தொழிலுக்கான ஆயத்தப் படுத்தல்

9.எண்ணிம குடியியல்


தரம் 9 ல் மாணவர்களுக்கு தேசிய அளவிலான பரீட்சை பரீட்சை திணைக்களத்தால் நடத்தப்படுவதுடன் மாகாண/ வலய மட்டத்தில் உளப்பாங்கு (Psychometric) பரீட்சையும் நடத்தப்படும். 


இந்த உளப்பாங்குப் பரீட்சை Skill test எனப்படுகிறது.


தரம் 10 (2028) தொடக்கம் - 35 கிறெடிட்கள்

***********************************************

கட்டாய பாடங்கள் 5 (18 credits)

தொடருறு கல்விக்கான பாடங்கள் 2  (14 credits)

வாழக்கைத்திறன்கள் ( 03 credits)


அத்தியாவசிய பாடங்கள்

Essential Subjects (14 credits)

*****************************

1. தமிழ் மொழி

2.ஆங்கில மொழி

3.கணிதம்

4.விஞ்ஞானம்

5.சமயமும் விழுமிய கல்வியும்

( இப்பாடத்துக்கு 2 credits மற்றையவற்றுக்கு தலா 03 credts)


தெரிவும் பாடங்கள் 2

Two Elective Subjects

************************

பின்வரும் பாடஙாகளில் இருந்த 2 பாடங்களை மட்டும் மாணவர் தரம் 10ல் தெரிவு செய்வார்.

 *  இரண்டாம் தேசிய மொழி

 * ICT

 * வரலாறு

 * குடியுரிமை கண்கலங்கி

 * சுகாதாரமும் உடற்கல்வியும்


 * தொழினுட்பம் (பின்வருவனவற்றுள் ஒன்று: விவசாய முகாமைத்துவ தொழினுட்பம், வடிவமைப்பும் பொறியியல் தொழினுட்ப மும், உணவு மற்றும் நுகர்வுக் தொழினுட்பம், சித்திர வேலைப்பாடுகள் உற்பத்தி கைத்தொழில், நீரக உயிர்வளி தொழினுட்பம்)


* புவியியல்

* அழகியல் கல்வி (தற்போதைய அழகியல் பாடங்கள் உள்ளன)

* முயற்சியாண்மையும் நிதிசார் அறிவும்


மேலுள்ள 7 பாடங்களுக்கு மேலதிகமாக மேலும் 7 பாடங்களை மாணவர்கள் தெரிவு செய்து கற்க வேண்டும். Essential Subject  பாடங்கள் 7க்கு மட்டும் இலங்கை பரீட்சை திணைக்களம் இப்போது நடத்துவது போன்று பரீட்சையை நடத்தும். ஆனால்  மேலதிக பாடங்கள் 7 க்கும் பரீட்சை திணைக்களம் பரீட்சையை நடத்தாது. மாகாண/ வலய மட்ட பரீட்சை நடைபெறும். இது மாணவரின் சித்தி வீதத்தை பாதிக்காது. ஆனால் உயர்கல்வி பற்றிய தெரிவு எதுவென்பதை உறுதிப்படுத்தும்.


மேலதிக பாடங்கள் பின்வருமாறு 4 தொகுதிகளாக உள்ளன.


வகை -1. STEM  (13 பாடங்களில் 4 ஐ தெரிவு செய்ய வேண்டும்.)

******************************

* பிரயோக கணிதம்

* தூய கணிதம்

* உயிரியல்

* இரசாயனவியல்

* பௌதிகவியல்


* சுகாதாரமும் உடற்கல்வி யும்

* கொம்பியூட்டர் சையன்ஸ்

* டேட்டா சைன்ஸ்

* விவசாய விஞ்ஞானம்

* பொறியியல் தொழினுட்பம்

* உயிர்ப் பொறியியல் தொழினுட்பம்

* உணவு நுகர்வோர் தொழினுட்பம்

* விமானப் போக்குவரத்து கல்வி


வகை 2: மனிதநேயமும.சமூக விஞ்ஞானமும்

**********************************

* மொழியும் இலக்கியமும்

* ஊடகமும் தொடர்பாடலும்

* வெளிநாட்டு மொழிகள்

* செம்மொழி கள்

* குடியுரிமைக்கல்வி

* வரலாறு

* புவியியல்

* சமூக விஞ்ஞானம்

* தர்க்கவியல்

* அழகியல் பாடங்கள் (தற்போதைய)


வகை 3: முகாமைத்துவமும் முயற்சியாண்மையும்

**********************************

* பொருளியல்

* கணிதம்

* ICT

* கணக்கீடு

* வணிக கல்வி

* வணிக புள்ளி வபரவியல்

* முயற்சியால் மையும் நிதிசார் அறிவும்

* வழங்கல் சுழற்சி முகாமைத்துவம்


வகை 4: திறன் பாதை

*************************

* நிர்மாணமும் உட்கட்டமைப்பும்

* புத்தாக்க கைத்தொழில்

* ஆரம்ப கைத்தொழில்

* சமூக சேவை

* உற்பத்தி தொழினுட்பம்


வகை 1ல்  விரும்பிய 4 பாடங்களை எல்லோரும் கற்க வேண்டும். வகை 2, வகை 3 ஆகிய வகைகளில் ஏதாவது ஒரு வகைக்குள் மட்டும் சென்று 2 பாடங்களை மட்டும் கற்க வேண்டும். வகை 4ல் ஒரு பாடத்தை எடுக்க வேண்டும். இவ்வாறு இந்த 7 பாடங்களும் அமையும்.


க.பொ.த (உ/த) 2032

************************

5 பாடத்துறைகள் (5 streams)


3 பாடங்கள்


பொது ஆங்கிலம் & GIT  


சக்தியூட்டும் மொடியூல்- தமது பாடத்துறை க்கு வலுச்சேர்க்கும் விதமாக Balance personality ஐ உருவாக்குவதற்காக அப்பாடத்துறையில் அல்லாத மொடியூல்களை மாணவர்கள் தெரிவு செய்து கற்க வேண்டும்.


உயர்தர பாடத்துறைகள் (Subject streams) பின்வருமாறு அமையும்.

*********************************************

Science stream

Technology stream

Management & Enterpreunership

Humanities & Social Sciences

Vocational Path 


50 நிமிட பாடவேளை கொண்ட 7 பாடவேளைகள் ஒரு நாளுக்கு அமையும். இதனால் பாடசாலை நேரம் தற்போதுள்ள தை விட 30 நிமிடங்கள் அதிகரிக்கும்.


#GK #Srilanka #education 

How to prepare for GS exam in Tamil (Tamil-ல் தயாராகும் முழுமையான வழிகாட்டி)

0

📌 GS Exam என்றால் என்ன?

GS (General Studies) என்பது பொதுத் தேர்வுகளில் கேட்கப்படும் பொது அறிவு + நடப்பு நிகழ்வுகள் சார்ந்த பாடப்பிரிவு.

பொதுவாக உள்ள தலைப்புகள்:

  • வரலாறு

  • புவியியல்

  • அரசியல்

  • பொருளாதாரம்

  • அறிவியல் & தொழில்நுட்பம்

  • நடப்பு நிகழ்வுகள் (Current Affairs)

  • தமிழ்நாடு சிறப்பு (TNPSC)


🗓️ Step 1: Syllabus முழுமையாக புரிந்துகொள்ளுங்கள்

முதலில் நீங்கள் எழுதப்போகும் தேர்வின் அதிகாரப்பூர்வ syllabus-ஐ download செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

👉 உதாரணம்:

  • TNPSC Group Exams

  • UPSC Prelims / Mains GS

  • SSC / Banking Exams

Syllabus இல்லாமல் படிப்பது → நேர விரயம்




📚 Step 2: Tamil Medium புத்தகங்கள் (முக்கியம்)

📘 1. History (வரலாறு)

  • TNPSC History Tamil Book

  • 6–12 Std Tamil Medium History Books

  • Indian National Movement (சுருக்க குறிப்புகள்)

🌍 2. Geography (புவியியல்)

  • 6–12 Std Geography (Tamil)

  • Physical Geography basics

  • Tamil Nadu Geography (TNPSCக்கு முக்கியம்)

🏛️ 3. Polity (அரசியல்)

  • Indian Constitution – Tamil Medium

  • Fundamental Rights, DPSP, Parliament, Judiciary

💰 4. Economics (பொருளாதாரம்)

  • 11–12 Std Economics (Tamil)

  • Budget, GDP, Inflation – basics

🔬 5. Science & Technology

  • 6–10 Std Science (Tamil)

  • Space, Defence, IT, Medical News



📰 Step 3: Current Affairs – தினசரி பழக்கம்

தினமும் 30–45 நிமிடம்

Tamil Sources:

  • தினசரி செய்தித்தாள்கள் (Dinakaran / Dinamalar)

  • Tamil Current Affairs YouTube Channels

  • Monthly Tamil CA PDF (TNPSC / UPSC)

📌 Tip:
👉 ஒரு Current Affairs Notebook வைத்துக் கொள்ளுங்கள்.



📝 Step 4: Notes எடுப்பது (மிக முக்கியம்)

  • ஒவ்வொரு தலைப்புக்கும் Short Notes

  • Bullet points + Keywords

  • Tamil + English Mix okay

👉 Revision time-ல் இது மிக உதவும்.



⏰ Step 5: Daily Study Plan (Example)

நேரம் படிப்பு
5.30 – 6.30 AM Current Affairs
10 – 12 PM GS Subject
3 – 4 PM Notes / Revision
7 – 8 PM MCQ Practice


🧠 Step 6: MCQ Practice & Tests

  • TNPSC / UPSC Previous Year Questions

  • Online Tamil MCQ Apps

  • Weekly Mock Test

📌 MCQ Practice இல்லாமல் GS clear ஆகாது.



🔁 Step 7: Revision Strategy

  • Weekly Revision

  • Monthly Full Syllabus Revision

  • Examக்கு முன் → Short Notes only



💡 Extra Tips

✔ Tamil Medium-ல் படித்தாலும் Key English Terms தெரிந்திருக்க வேண்டும்
✔ ஒரே புத்தகம் – பல முறை வாசிக்கவும்
✔ Social Media distraction குறைக்கவும்
✔ Consistency தான் வெற்றி


🎯 Final Advice

GS Exam =
Syllabus + Standard Books + Current Affairs + Revision + Practice



அரச அறிவிப்பு | கிராம சேவகர் (GS) தொடர்பான முறைகேடுகள்

0


அரச அறிவிப்பு | கிராம சேவகர் (GS) தொடர்பான முறைகேடுகள் – உடனடி புகார் வழிமுறை


கிராம சேவகர் (GS) மூலம் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டிய அரசாங்க தொடர்பு இலக்கங்களை அரசு அறிவித்துள்ளது.


தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கங்கள்:

📞 1905

📞 ஜனாதிபதி செயலகம்:

011 235 4354

011 235 4655

011 248 4500 / 600 / 700


முறைப்பாடு செய்யும்போது வழங்க வேண்டிய விவரங்கள்:


1. கிராம சேவகரின் பெயர்


2. அவர் பணியாற்றும் கிராம சேவை பிரிவு


3. சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர் பிரிவு


4. மாவட்டம்


5. நீங்கள் பாதிக்கப்பட்ட விவரம் அல்லது

– கிராம சேவகர் ஊடாக பரிந்துரைக்கப்பட்டதாக கூறப்படும் மோசடி கொடுப்பனவுகள் / முறைகேடுகள் தொடர்பான தகவல்கள்


மொழி வசதி:

🗣️ தமிழ், சிங்களம், ஆங்கிலம் – மூன்று மொழிகளிலும் உங்கள் புகார்களை பதிவு செய்ய முடியும்.


அரசின் உறுதி:

யாரிடமும் சென்று கெஞ்ச வேண்டிய அவசியமில்லை. உங்கள் உரிமையை முதலில் உங்களுக்கு பொறுப்பான கிராம சேவகரிடம் கேளுங்கள். தவறு தொடர்ந்தால், அரசு அறிவித்துள்ள மேற்கண்ட தொடர்பு இலக்கங்கள் மூலம் நேரடியாக புகார் செய்யுங்கள்.

நிச்சயமாக, உங்கள் உரிமைக்கான நீதி காலதாமதமின்றி கிடைக்கும் என அரசு உறுதியளித்துள்ளது.

இந்த தகவலை பொதுமக்களின் நலனுக்காக பகிருங்கள்.


#Gs #GK #2025 #anura


நில அளவுகள் அறிவோம்.

0

 


நில அளவுகள் அறிவோம்.

1 ஏக்கர்_ 4 றூட். 1 ஏக்கர்_ 160 பேர்ச்

இதுவே இலங்கையில் நடைமுறையில் உள்ள நில அளவை


1 ஹெக்டேர் – 2 ஏக்கர் 47 சென்ட்

1 ஹெக்டேர் – 10,000 சதுர மீட்டர்

1 ஏக்கர் – 0.405 ஹெக்டேர்

1 ஏக்கர் – 4046.82 சதுர மீட்டர்

1 ஏக்கர் – 43,560 சதுர அடிகள்

1 ஏக்கர் – 100 சென்ட்

1 சென்ட் – 435.6 சதுர அடிகள்

1 சென்ட் – 40.5 சதுர மீட்டர்

1 கிரவுண்ட் – 222.96 சதுர மீட்டர்

1 கிரவுண்ட் – 2400 சதுர அடிகள்

1 மீட்டர் – 3.281 அடி

1 குழி – 44 சென்ட்

1 மா – 100 குழி

1 காணி – 132 சென்ட் (3 குழி)

1 காணி – 1.32 ஏக்கர்

1 காணி – 57,499 சதுர அடி

1 டிசிமல் – 1 1/2 சென்ட்

1 அடி – 12 இன்ச் (30.38 செ.மீ)

1 மைல் – 1.61 கிலோ மீட்டர் (1610 மீட்டர்)

1 மைல் – 5280 அடி (8 பர்லாங்கு)

1 கிலோ மீட்டர் – 1000 மீட்டர் (0.62 மைல்)

1 கிலோ மீட்டர் – 3280 அடி

1 கிலோ மீட்டர் – 5 பர்லாங்கு

1.61 கிலோ மீட்டர் – 1 மைல்

1 பர்லாங்கு – 660 அடி (220 கெஜம்)

1 செயின் – 66 அடி (100 லிங்க்)

1 லிங்க் – 0.66 அடி

1 கெஜம் – 3 அடி

8 பர்லாங்கு – 1 மைல் (201.16 மீட்டர்)

1 ஏர்ஸ் – 1076 சதுர அடி (2.47 சென்ட்)

22 கெஜம் – 1 செயின் (66 அடி)

10 செயின் – 1 பர்லாங்கு

1 இன்ச் – 2.54 செ.மீ

1 செ.மீ – 0.3937 செ.மீ

1 கெஜம் – 0.9144 மீட்டர்

1 மீட்டர் – 1.093613 கெஜம் (3.28 அடி)

1 சதுர மீட்டர் – 10.76391 சதுர அடிகள்

1 சதுர அடி – 0.0929 சதுர மீட்டர்

30 சதுர மைல் – 1 டவுன்சிப்

640 ஏக்கர் – 1 சதுர மைல்..

 

Total Pageviews