0
இலங்கையின் தொழில்நுட்பக்கல்வி
2009 இல் ஆரம்பிக்கப்பட்ட தொழிநுட்ப துறை சார்ந்த பல்கலைக் கழகம் UNIVOTEC - வாழ்க்கைத் தொழில்சார் தொழிநுட்பவியல் பல்கலைக்கழகம். இது 2008ம் ஆண்டு 31ம் இலக்க பாராளுமன்ற சட்டத்தின் கீழ் தொழில்சார் தொழினுட்ப டிப்ளோமாக்களையும் பட்டங்களையும் வழங்குவதற்கௌ இரத்மலானையில் ஸ்தாபிக்கப்பட்டது.
NvQ- National Vocational Qualifications - தேசிய தொழில் தகைமை
இத் தேசிய தொழில்தகைமை TVEC இனால் வடிவமைக்கப்பட்டதாகும். இது இலங்கையிலுள்ள தொழிநுட்பவியல் கல்லூரிகள் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரிகளின் ஊடாக செயற்படுத்தப்படுகின்றது.
இத் தொழிற் தகைமையானது மட்டம் 1 தொடக்கம் 7 வரை படிமுறை அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் மட்டம் 1 - 4 வரையானவை தேசிய சான்றிதழ் மற்றும் அடிப்படையான கற்கைநெறிகளாகும்.
மட்டம் 1 - அடிப்படை திறன்கள்
மட்டம் 2 - மேற்பார்வையின் கீழ் வேலை செய்தல்.
மட்டம் 3 - சிறிய மேற்பார்வையின் கீழ் வேலை செய்தல்.
மட்டம் 4 - சுயமாக வேலை செய்தல்.
0 மட்டம் 5, 6 ஆகியன டிப்ளோமா மட்டமாகும்.
மட்டம் 5 - ஏனையோரை மேற்பார்வை செய்தல்.
மட்டம் 6 - ஏனையோரை முகாமை செய்தல்,
0 மட்டம் 7 பட்டதாரி தகைமையையுடைய மட்டமாகும். மட்டம் 7-வடிவமைப்பிற்கும் கண்டுபிடிப்பிற்கும் உட்படுத்தல்,
வாழ்க்கைத் தொழில்சார் தொழில்நுட்பவியல் பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் Ranjith Premalal De Silva.
வழங்கப்படும் கற்கை நெறிகள்
1.தொழில்நுட்ப இளமானி (B.Tech)
2.தொழில்நுட்ப கல்வி இளமானி (B. Ed. Tech)
3.க.பொ.த. உயர்தர தொழில்நுட்பவியல் பாடத்துறை
க.பொ.த உயர்தரம் சித்தியடையாவிடின் வாழ்க்கையில் கேள்வியுறாமல் NVQ 3 படிநிலை ஊடாக தொழில் இல்லாத பட்டம் பெற்ற காலம் முடிவடைந்து தற்போது தொழில்நுட்பவியல் பட்டமொன்று பெற்றுக் கொள்ள முடியும்.
இக்கற்கை நெறியின் ஏனைய பயன்கள்
பல்கலைக்கழக பிரவேச சந்தர்ப்பம் 2250
தொழிற்சந்தையில் உயர்தர கேள்வி ஒன்று
வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்கு தேவையான ஆரம்ப தமைமை
தொழில்நுட்பவியல் பட்டம் வரை கற்பதற்கு அவகாசம்
சர்வதேச தொழிற்சந்தைக்கு இயைபாகும் சிற்ப நிபுணத்துவம்
தேசிய கல்வி விஞ்ஞான பீட பிரவேசம் 400
தொழில்நுட்ப கல்லூரிகளில் தொழில் பயிற்சி பிரவேச சந்தர்ப்பம்
பாடசாலையிலே NVQ 3 சான்றிதழ்
மேலதிக தகவல்களுக்கு : - University of Vocational Technology http://univotec.ac.lk/











0Awesome Comments!